தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சுமந்திரனின் கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை, சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.