நடைமுறையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் அடையாள அட்டைகள் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் வழங்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக புதிதாக அடையாள அட்டை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார்.
குறித்த அடையாள அட்டையானது பாதுகாப்பு உத்திகள் பலவற்றை கொண்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதன் இரண்டாவது கட்டமாக 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய ஸ்மார்ட் அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணாதிலக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது