கிளிநொச்சியில் தொடர்ந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் உள்ள கிணற்றில் இருந்து மேலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் கிணறுகள், மலசல கூட குழிகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டு வந்தன.

இதேவேளை அண்மையில் ஆனையிறவு பகுதியில் இவ்வாறு பெருமளவிலான மோட்டார் குண்டுகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts