ஆவா குழுவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நிஷா விக்டெர் என்பவர் ஆவா குழுவின் தலைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
கோப்பாய் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.