இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 183 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக நிர்ணயித்த 622 ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் 439 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி உள்ளது. தற்போது இலங்கை அணி போலே ஓன் முறையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணி சார்பில் புஜாரா 133 ஓட்டங்களையும், ரஹானே 132 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெறும் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிக்வெல்ல 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.