சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வரவுள்ளது.
இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய மருத்துவமனைக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.