ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ரயிலில் யாசகம் கேட்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ரயில் நிலைய பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.