வட மாகாண மகளிர் விவகார அமைச்சில் நிதியில்லை! : வடக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி

வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களுக்கு நிதி, அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் துணியிலான பைகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts