இலங்கை இராணுவ வீரர்கள் அண்மையில் கிளிநொச்சி மல்லாவி வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானப்பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரியினால் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க 65வது படைப்பிரிவின் கீழுள்ள சுமார் 500 படை வீரர்கள் இந்த சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலை வளாகத்தினை அழகுபடுத்தும் வகையில் 150 பூச்சாடிகளை படையினர் அன்பளிப்பு செய்தனர்.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவைக்கொண்டு வட மாகணத்தில் காணப்படும் பிரதான சுகாதார நிலையமான இவ் வைத்தியசாலைக்கு நாளாந்தம் நூற்றுக்கும் அதிகாமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படையினர், தன்னார்வத்தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.