அவசர குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்!

நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் விநியோகிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதாவது குறைபாடுகள் காணப்படின் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts