எதிர்பாராத விதமாக நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
ஒரு பகுதியில் அதிகளவான மின்சாரம் தேவைப்படும் போது அங்கு மின்சார தடை ஏற்படும் என மின்சாரசபையின் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் வைத்தியசாலைகள் காணப்படும் பகுதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவித்துள்ளார். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பழுதடைந்த ஒரு பகுதி இதுவரையில் பழுதுபார்க்கப்படாமையினால் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.