அமர்வுகளை திறமையாக நடத்தினோம் என்கிறார் அவைத்தலைவர் : பயனற்ற அமர்வுகள் என்கிறார் எதிர்க்கட்சி உறுப்பினர்

சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 100 அமர்வுகளும் பயனற்றதாகவே நடந்து முடிந்துள்ளது. இனியாவது 101ஆவது அமர்வில் இருந்தாவது , பயனுள்ள அமர்வுகளை நடாத்துவோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் வை. தவநாதன் தெரிவித்தார்.

Related Posts