3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாளை பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதற்காக 3 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக நாளை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் மாணவர்கள், பெற்றோர்களின் கூடிய ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று சிரமதான நடவடிக்கைகளுக்காக பொருத்தமான உடையுடன் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களிடம் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புகை விசிறல், நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும்.