எரிபொருள் விநியோகம், அத்தியவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவினால் கையெழுத்திடப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை முதல் இராணுவத்தினரால் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் பணிக்கு திரும்பாத பெற்றோலிய ஊழியர்கள், தாமாகவே பணியிலிருந்து விலகியதாகக் கருதப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.