யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி, மணற்காட்டுப் பகுதியில் அனுமதியற்ற வகையில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞன் மரணமடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கைது செய்யப்பட்ட பொலிஸாரின் விளக்கமறியலை நீடிக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.