யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சூப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மறைந்துள்ள இடம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.