2 மணி நேரத்துக்குள் டெங்கு பரிசோதனை பெறுபேற்றை வழங்கவும்

டெங்கு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு நடாத்தப்படும் இரத்தப் பரிசோதனையை 2 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலைகளின் பரிசோதனை நிலையங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரத்தப் பரிசோதனை அறிக்கை வழங்க 90 நிமிடங்களை அரச வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள் இதற்காக 8 மணித்தியாலங்களை எடுக்கின்றன.

நோயாளர்களை அவசரமாக இனங்கண்டு கொள்வதற்காக இந்த பரிசோதனை நேரத்தைச் சுருக்கிக் கொள்ளுமாறு தனியார் மருத்துவ மனைகளை பிரதமர் கேட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் மீறு பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

Related Posts