இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் நேற்று (20) உத்தரவிட்டார்.
காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த இளைஞரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.