வட. மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கான நிதிவழங்கலை 91 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனூடாக நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தலை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீள ஆரம்பிக்க வழிசெய்ய ஜப்பான் எதிர்பார்த்துள்ளது.
இலங்கையில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக, கடந்த 2003ஆம் ஆண்டுமுதல் இதுவரை ஜப்பான் அரசாங்கத்தினால் 30.1 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.