தென்னிலங்கையில் ‘கிறீஸ் மனிதன்’! : ஒருவர் உயிரிழப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பீதியை கிளப்பிய ‘கிறீஸ் மனிதன்’ தற்போது தென்னிலங்கையில் உலாவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

‘கிறீஸ் பேய்’ என அழைக்கப்பட்ட இவ்வகையான மனிதர்கள், உடம்பு முழுவதும் கிறீஸை பூசிக்கொண்டு, குறிப்பாக பெண்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை பயமுறுத்திச் செல்வது மற்றும் அவர்களுடைய உடைகளை திருடிச் செல்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுள்ளனர்.

குறிப்பாக ஹங்வெல்ல பகுதியில் கிறீஸ் மனிதனை பிடிப்பதற்கு துரத்திச் சென்ற இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, களுத்துறையில் கிறீஸ் மனிதனின் கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அண்மையில் வெல்லவாய பகுதியில் இவ்வாறான ஒரு மனிதனை பிடித்து பொலிஸாரிடம் மக்கள் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts