வடக்கு மாகாணசபையில் மீண்டும் மாற்றம்: டெனீஸின் இடத்திற்கு விந்தன்!

வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பரிந்துரைக்கான கடிதம் நேற்றயதினம் (திங்கட்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் செயற்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது 8 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், டெனிஸ்வரனின் பதவி நீக்கம் குறித்து முதலமைச்சர் இதுவரை தன்னுடன் கலந்துரையாடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts