வடக்கு மாகாண விவசாய அபிவிருத்திக்கு “மாகாணத்துக்கான குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிமூலம் 135 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இந்த நிதி யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் பகிரப்படும்.
அந்த நிதியில் 18 வகையான விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருமாவட்டத்திலும் 18 வகையான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
விவசாய அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் 18 வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சில 50 வீத மானிய உதவியுடன் கூடியதாகவும் சில நூறு வீதமும் மானிய உதவியுடன் கூடியதாக மேற்கொள்ளப்படவுள்ளன. விவசாய அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு தேவையான பயனாளி தெரிவுகள் பெரும் பிரிவுகளுக்கு பொறுப்பான விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்க ளத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18 வகையான விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நெல் உற்பத்தி அபிவிருத்தி உவர் நில நெற்பயிர்ச்செய்கை பப்பாசி தேசி பயிர்ச்செய்கை தேனீவளர்ப்பு காளான் உற்பத்தி பழப்பயிர் உற்பத்தி உண்மை வெங்காய விதை உற்பத்தி வளவியல் பயிர்ச்செய்கை உள்ளிட்ட பதினெட்டு வகையான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.