இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இக்காலப் பிரிவில் மாத்திரம் 91000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தத்தமது வீடு, சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக மாத்திரமே இந்த டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.