மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று பில்லியன் ரூபா பெறுமதியான நெவில் பெர்னர்ணடோ தனியார் வைத்தியசாலை, அதன் உபகரணங்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த வைத்தியசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எவ்வித கட்டணங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் வைத்தியசாலையின் தலைவர் டாக்டர் நெவில் பெர்ணான்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.