கிளிநொச்சி, முறிகண்டி ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்தவராக இருக்கலாம் என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்றிரவு யாழிலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த ரயிலில், மிதிப்பலகையில் சென்ற நபரொருவர் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நபர் முறிகண்டிக்கும், மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலேயே தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாங்குளம் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், முறிகண்டி ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலிருந்து சடலமொன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.