புலித்தொப்பி வழக்கு; சந்தேகநபர்கள் விடுவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது.

இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களான முல்லைத்தீவு – நந்திக்கடல் இராணுவ முகாமின் இலத்திரனியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த சுப்ரமணியம் நகுலராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜேசுரத்னம் ஜெகசாந்தன் மற்றும் மஹாதேவா பிரசன்னா ஆகிய மூவரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே, அவர்களை நீதவான் விடுவித்தார்.

Related Posts