யாழ். மல்லாகம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார்.
மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான குறித்த மாணவி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
பின்னர், கடத்தப்பட்ட வானிலிருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி, பொதுமக்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடத்தியவர்கள் மற்றும் கடத்தப்பட்டமைக்கான காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளிவராத நிலையில், மல்லாகம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.