ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை!

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

“ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று கடந்த வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைவரிடம் இது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அதில் கலந்து கொண்டிருந்த வட.மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் வட.மாகாண சபையிலே ஒரு நியதி சட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். அச்சட்டம் வெகு விரைவில் நடைமுறைக்கு வரும் போது முற்று முழுதாக ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடைபெறுவதை நிறுத்தி உங்களிற்கான ஒத்துழைப்பபை வழங்குவதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக புதிய கல்வி அமைச்சரிடமும் நான் நினைவுபடுத்தியிருந்தேன். அதன் பயனாக இன்னும் இரண்டு மாதங்களில் வட.மாகாணம் முழுவதும் நடைமுறைக்கு வரும்” என வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

Related Posts