மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஜமைக்காவில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் சார்பில் கைல் ஹோப் 46 (50) ரன்களும், ஷாய் ஹோப் 51 (98) ரன்களும் எடுத்தனர்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 111 (115) ரன்களை குவித்தார். தினேஷ் கார்த்திக் 50 (52) ரன்களும், ரகானே 39 (51) ரன்களும் எடுத்தனர்.
மேற்கு இந்திய தீவுகள் சார்பில் ஜோசப், பிஸீ தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இதில் முதல் போட்டி மழை காரணமாக தடையானது. மற்ற மூன்று போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.