மாற்று சக்தி மின் நிலையத்தில் வடக்கில் உள்ள 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய மாற்று சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகப்பெரிய மாற்று சக்தி மின் உற்பத்தி நிலையமாக குறித்த திட்டம் அமைய உள்ளது, இந்த திட்டத்தில் வடக்கில் உள்ள 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை முடிந்தால் அதிகரிக்காமல் பாருங்கள் என பலர் சவால் விட்டுள்ளனர் குறித்த திட்டங்கள் நிறைவு பெற்றதும் இயலுமானவரை கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் அதிகளவான மின் உற்பத்தி கிடைக்கும், 24 மணிநேரமும், 365 நாட்களும் காற்று, சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெற்றுக்கொள்ளகூடிய பிரதேசமாக இது காணப்படுகின்றது” என தெரிவித்தார்.