பிரதமர் மோடியின் அனுபவ குறிப்புடன் முதல்வர் விக்கியை சந்தித்தார் தமிழிசை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்ததுடன் பிரதமர் மோடியின் அனுபவ குறிப்பு ஒன்றினையும் வழங்கியுள்ளார்.

யாழ்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்த தமிழிசை, வடக்கு முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை இச்சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் அந்த மாநிலத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை விபரிக்கும் வகையில் தான் எழுதிய நூலினை முதல்வரிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் நேற்று வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் வழங்கிய உறுதி மொழிகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts