இனி வரும் காலங்களில் முச்சக்கரவண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம், மணித்தியாலயத்துக்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.
இதன் வர்த்தமானி அறிவித்தலை, அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.