இம்முறை, முதியோர் தினத்தை சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, நூறு வயதைத் தாண்டியவர்களையும்,15 பிள்ளைகளைக் கொண்ட 75 வயதைத் தாண்டிய பெற்றோர்களையும் கௌரவிப்பதற்காக, அவர்கள் தொடர்பில் தகவல்களைத் தங்களுக்கு வழங்குமாறு அச்செயலகம் அறிவித்துள்ளது.
இந்தத் தகவல்களை, பிரதேச செயலகத்தில், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழக்குமாறு, அச்செயலகம், மக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.