தமிழரசுக்கட்சியின் கேள்வி பதில் நிகழ்ச்சி : எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதில்!!!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

“சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் பங்கேற்பவர்களால் எழுத்து மூலமாக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மாத்திரமே இதன்போது பதில் வழங்கப்படும் என நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

Related Posts