இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள 54 ஏக்கர் காணி எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை 9 மணிக்கு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு அரச அதிபர் நா.வேதனாயகனிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எனவே அன்றைய தினம் இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் தவறாது குறிப்பிட்ட நேரத்துக்கு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதியிடம் ஏனைய காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜரும் கையளிக்கவுள்ளனர்.
இதேவேளை மயிலிட்டி பகுதி மக்களுக்கு பருத்தித்துறையிலிருந்து காலை 7 மணிக்கு பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.