நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆறுமுகநாவலர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெறாது. ஆகவே நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது.
தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி, தாயகம், வடக்கு, கிழக்கு இணைப்பு என்று அடிப்படைகளைக் கூறிவிட்டு ஒற்றையாட்சியின் கீழ் ‘13 ஆவது திருத்த சட்ட முழுமையான நடைமுறைப்படுத்தல்’ என்பதை ஏற்றுக்கொள்வது என்பது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். எமது நிலையிலிருந்தான் பிரச்சினையை அணுகவேண்டுமே தவிர கொழும்பின் பார்வையிலிருந்து அணுகமுடியாது. ஒற்றையாட்சியில் 13 ஆவது திருத்த சட்டத் தீர்வானது என்றைக்குமே தமிழ் மக்களை தமது அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும். ஒற்றையாட்சி எம்மை என்றைக்குமே அடிமைகளாக்கிவிடும்.
இதனை நான் வலியுறுத்துவதால் என்னை ஓரங்கட்டி அரசியலிலிருந்து விரட்டிவிட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலர் சதிகள் சறுக்கியதும் சவால்களில் ஈடுபட முன்வந்துள்ளார்கள்.
நாவலர் தமதுகொள்கைகளில் விட்டுக் கொடுக்காத ஒருநிலையைப் பின்பற்றிவந்தமை பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார் ஏன் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தமாக நாவலர் இருந்ததுபோல் விடாப்பிடியாக நிற்கின்றீர்கள்? சம்பந்தர் போல் விட்டுக் கொடுக்கலாமே என்று. அதற்குநான் சம்பந்தர் ஐயா விட்டுக் கொடுக்கின்றாரோ இல்லையோ நான் அறியேன். ஆனால் அடிப்படை அத்திவாரத்தை நாங்கள் கெட்டியாகக் கட்டாவிட்டால் முழுக் கட்டடமுமே ஒருநாள் தகர்ந்து விழுந்துவிடும். பிழையான அத்திவாரத்தில் சரியான கட்டடம் காலாகாலத்தில் நிறுவப் படலாம் என்று எண்ணுவது மடமை என்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பிறகு கட்டலாம் என்பது கூட தகுந்த அத்திவாரம் இட்ட பின்னர் தான் பொருந்தும். இதனால்தான் சைவசமய அனுஷ்டானங்களிலும் அவற்றின் நெறிமுறைகளிலும் ஒரு இறுக்கம் நாவலரால் கடைப்பிடிக்கப்பட்டது. அன்பு நிலைவேறு அனுபவநிலைவேறு. அடிப்படைகளைவிட்டுக் கொடுக்காது அன்புநிலையில் வாழலாம் என்பதை எமக்குணர்த்தியவர் நாவலர்.
தேசீயம்,சுயநிர்ணயம்,தாயகம்,தன்னாட்சி,வடக்குகிழக்கு இணைப்புஎன்றுஅடிப்படைகளைக் கூறிவிட்டுஒற்றையாட்சியின் கீழ்13ஆவதுதிருத்தச்சட்டமுழுமையான நடைமுறைப்படுத்தல் என்பதைஏற்றுக் கொள்வதென்பதுஎத்தகையவிபரீதங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒற்றையாட்சி என்றவுடன் நாம் கோரியதேசியம்,தாயகம்,சுயநிர்ணயம்,தன்னாட்சிஎன்பன இருந்த இடந் தெரியாமல் மறைந்துவிடுவன. 13ஆவது திருத்தச்சட்ட முழுமையான நடைமுறைப்படுத்தலின் கீழ் வடக்கு கிழக்கு இணைப்பு கூட இடம்பெறாது. ஆகவேநாங்கள் கேட்பதில் எதையுமேதராது ஒருதீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப் பார்வை. எமது இனப்பிரச்சனையைத் தீர்க்க கொழும்பின் யன்னல்,கொழும்பின் பார்வையாவன ஒருபோதும் உதவா என்பதேஎன் கருத்து. அரசியல் பிரச்சனையானது எங்களுக்கு ஏற்பட்ட ஒன்று. நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். எமது நிலையில் இருந்துதான் பிரச்சனையை அணுக வேண்டுமே ஒளியகொழும்பின் பார்வையில் இருந்தல்ல. ஒற்றையாட்சியில் 13வது திருத்தச் சட்டத் தீர்வானது என்றென்றைக்குமே தமிழ் மக்களைத் தமது அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும்.
ஒற்றையாட்சி எம்மை என்றென்றைக்குமே அடிமைகள் ஆக்கிவிடும்.எமது தனித்துவம் பேணப்படவேண்டுமென்றால்வெறும் 13ஆவது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்றுமுழுதுமாக எதிர்க்கவேண்டும். இதையே திருவாளர்கள். அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் 28.10.1987ஆம் திகதிய கடிதத்தால் ரஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள்.அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிடபல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலர் சதிகள் சறுக்கியதும் சவால்களில் ஈடுபடமுன்வந்துள்ளார்கள். எமது இனம் பற்றிசிந்திப்பது நாவலரின் இறுக்கச் சிந்தனைகளுக்கு ஒப்பானது என்றால் இன்று நாவலரின் சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்.
அவ்வாறானஅடிப்படையில் பற்றுறுதி கொண்ட ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் ஆங்கிலக் கல்வியைக்கற்ற,தமிழைக் கற்பித்த,தமிழ் விவிலிய நூலை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக இருந்தபேர்சிவல் பாதிரியார் அதிபராக இருந்த இதே கல்லூரியில் அமைத்து திரைநீக்கம் செய்வது சமயங்களின் எல்லையைக் கடந்து தமிழுக்கும் அதன் செழுமைக்கும் வழங்கப்படுகின்ற ஒரு அங்கீகாரம் என்றவகையில் இன்றைய நிகழ்வுகாலம் கடந்தும் சரித்திரத்தில் இடம்பெறும் ஒருநிகழ்வாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.