மீண்டும் போராட்டத்தில் குதிப்போம்! : பெற்றோலிய தொழிற்சங்கம் எச்சரிக்கை

அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததற்கு முரணான வகையில் எமது பிரச்சினை களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்கினையே முன்னெடுக்கின்றது. எனவே, இந்நிலை நீடித்தால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.

இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா மேலும் குறிப்பிடுகையில் ,

எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் தாமதப்படுத்தி வருகின்றது. கடந்த காலங்களில் நாம் வேலை நிறுத்தம் செய்தபோது அறிவித்த போது எமது பிரச்சினைகளுக்கு வழங்கப்படுதாக கூறிய தீர்வுகள் குறித்த அரசாங்கத்தின் நிலைபாடு இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ய கூடாதென்றும் திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்ககுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொருளாதார எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தூய்மைபடுத்தும் செயற்பாடுகளை அரசாங்கமே முன்னெடுக் வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனவே அடுத்த வாரத்திற்குள் தீர்வு கிட்டாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ராஜகருணா எச்சரித்துள்ளார்.

Related Posts