போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி , தண்டப்பண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு தினத்தில் இருந்து மேலும் ஒரு வார காலத்திற்குள் தண்டப்பணத்தை செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் , போக்குவரத்து குற்றங்கள் தொடர்பிலான தண்டப்பணத்தை அனைத்து பிரதேச செயலகங்களிலும் செலுத்த முடியும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.