முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

இலங்கையில் சுற்றுலா பயணத்தில் ஈடுபடும் அமெரிக்க பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரிலுள்ள முச்சக்கர வண்டிகளில் ஏறுவதனை தவிர்க்குமாறு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி சாரதிகள், பெண் சுற்றுலா பயணிகளிடம் அங்க சேட்டையில் ஈடுபடும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான தூதரகத்தின் இணையத்தளத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்காமல் சுற்றுலா போக்குவரத்து நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களில் தங்கள் பயண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts