சுமந்திரன் கொலை முயற்சி : சந்தேக நபர்கள் மீது சிறையில் தாக்குதல்!! சட்டத்தரணிகள் பகிஸ்கரிப்பு!!

சிறைச்சாலையில் வைத்து கைதிகள் தாககப்பட்டதை கண்டித்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றசட்டத்தரணிகள் நேற்று நண்பகலிற்கு பின்னர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் இந்த பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மதிப்புக்குரிய தங்களுக்கு கிளிநொச்சி சட்டத்தரணிகள் தெரிவித்துக் கொள்வதாவது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்குரிய கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையானது வவுனியா சிறைச்சாலையிலே இயங்கி வருகின்றது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மட்டுமன்றி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முட்படுத்தப்பட்டு விசாரணையின் நிமித்தம் தடுத்து வைக்கப்படும் விளக்கமறியல் கைதிகளும் வவுனியா சிறைச்சாலையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற கைதிகள் மீதான சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் நேரடியானதும் தம்மால் நியமிக்கப்படும் நபர்களால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கல் எவ்வித காரணங்களற்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பல சம்பவங்கள் ஏற்கனவே இருக்கின்ற வேளை அண்மையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒரு கைதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விடையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றயதினம் எமது அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts