வடக்கு மாகாணசபை விவாகரத்தில் பதவி விலகிய இரண்டு அமைச்சர்களின் இடத்திற்கான புதிய தெரிவு இழுபறியில் உள்ளது. ஏற்கனவே அவ்விரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் தனது பொறுப்பில் எடுத்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராாவை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்துரையாடியிருந்தார்
இன்றைய தமிழரசுக்கட்சிக்கூட்டத்தில் ஆர்னோல்ட் அவர்கள் கல்விஅமைச்சுக்கான தெரிவாக முன்மொழியப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. அவரின் பெயரை மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் முன்மொழிந்ததாகவும் அறிய முடிந்தது. இருப்பினும் இறுதி முடிவு எடுப்பது முதலமைச்சரின் கையில்தான் உள்ளது. ஆர்னோல்ட் சுமந்திரனின் அணியில் இருந்து முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுத்து வந்தவர் என மாகாணசபை உறுப்பினர் விந்தனின் அறிக்கை அண்மையில் அம்பலப்படுத்தியிருந்தது.
இதேவேளை ஈபிஆர் எல் எப் இற்கான இடத்திற்காக மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவாகவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரியவருகின்றது. முதல்வர் 96வது அமர்வில் முல்லைத்தீவுக்கு அமைச்சர் வழங்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அதனை பயன்படுத்தி ரவிகரன் தமிழரசுக்கட்சிக்கூடாக காய்களை நகர்த்துவதாகவும் உள்வீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈபிஆர் எல் எப் தனக்குரிய சந்தர்ப்பத்தை சுரேஸ்பிரேமச்சந்திரனின் தம்பியாரான மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு வழங்கவேண்டும் என கோரியுள்ளது.