வைத்தியர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் படுகாயம்

கொழும்பில் வைத்திய அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலபே தனியார் வைத்தியசாலை தொடர்பில் நீடிக்கும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் நிறைவில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த வைத்திய அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts