சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களினால் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டபோது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் தண்ணீர்த்தாரைத் தாக்குதல் நடத்திய போது மாணவர்கள் சிதறி ஓடியதால் பலர் காயமடைந்திருந்தனர்.
இச் சம்பத்தினால் சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதியில் இருக்கும் வீதிகளில் கடும் வாகன நெரிச்சல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.