வடக்கு முதலமைச்சருக்கு புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப்புலிகள் ஆதரவு

வடக்கு முதலமைச்சருக்கு தமது ஆதரவை வழங்குவதாக புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையை கருத்தில் கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண சபையின் முதல்வராக சீ.வீ விக்னேஸ்வரன் இருக்க வேண்டும் . அவருக்கு எதிராக தழிழரசு கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் . உழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்விடயத்தில் தமிழ அரசுக்கட்சி தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts