இன்று காலை அமைச்சர் ஐங்கரநேசன் முதல்வர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க இராஜினாமா செய்வது தொடர்பில் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் அமைச்சருடன் மனந்திறந்து பேசியுள்ளார்.
அதன்போது அமைச்சர் ஐங்கரநேசன் தான் அவருக்கு தனது ஆதரவினை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்திருந்திருக்கிறார்.
இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே அணியினர் தூதனுப்பியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நேற்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் நீங்களாக பதவி விலகியதாக இராஜினாமாக்கடிதத்தை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிரான அணியில் இணைந்துகொள்ளுமாறு விவசாய அமைச்சருக்கு தூது அனுப்பப்பட்டதாக தெரியவருகின்றது.அதன் மூலம் தொடர்ந்து விவசாய அமைச்சராக நீடிக்க சந்தர்ப்பம் தரப்படும் என்றும் கேட்டிருக்கின்றனர்.
அத்துடன் அமைச்சர்களும் அவரை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் சுமந்திரன் அணி உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்கள் வந்தபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தரபபில் இருந்தும் முதலமைச்சருக்கு எதிரான அணிக்கு இன்று மாலைக்குள் வருமாறு அமைச்சர் வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது
இதேவேளை ஆளுனர் முதலமைச்சர் வி்க்கினேஸ்வரனை தனது பலத்தை நிரூபிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. முதல்வர் விக்கிக்கான ஆதரவு உறுப்பினர் பட்டியலில் அமைச்சர் ஐங்கரநேசன் சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளார்.
பதவி விலகல் கடிதம் சமர்ப்பித்தவுடன் ஐங்கரநேசன் இன்று மாலை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளார்