வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சேர்ந்த சிலரே முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுக்களை தற்போது முன்னெடுத்துள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் 20 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக கையெழுத்து இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.