தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பணிபகிஷ்கரிப்பின் பின்னரும் தமக்குரிய தீர்வுகள் வழங்கப்படாவிடின் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது.