பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 59 வீதமான மரணங்கள் தெற்றா நோய்களினால் ஏற்படுகின்றது எனவும் மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதியளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையே இதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் பயிற்சி போன்றன குறித்து பாடசாலை மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட உள்ளனர்