வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடங்களில் பலவாறாக சித்தரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையில் இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, இன்று (புதன்கிழமை) முதலமைச்சரால் அவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அவைத்தலைவர் தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்விடயம் தொடர்பான கருத்தாடல்கள் மிகத் துரிதமாக நிறைவுசெய்யப்பட வேண்டும் என்பது வடக்கு மாகாண சபையின் தேவையாக உள்ளதென அவைத்தலைவர் மேலும் குறிப்பிட்டார்.