இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு 10 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக நாடாளுமன்றில் கூடிய வாழ்க்கைச் செலவு குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதாகவும் இதனால் உள்நாட்டு சீனி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற நோக்கத்தில் இவ்வாறு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த வரி அதிகரிப்பினால் சீனியின் விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.